வனஉயிரினங்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மூலம் குடிநீர் வழங்கல்

வனஉயிரினங்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மூலம் குடிநீர் வழங்கல்

தண்ணீர் வைக்கும் அறக்கட்டளை நிர்வாகிகள்

வன உயிரினங்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மூலம் குடிநீர் உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. குடிநீர் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. குடிநீர் எட்டாக்கனியாக விளங்குகிறது. அப்படியானால் வன விலங்குகளுக்கு குடிநீரின் தேவை மற்றும் உணவுகளின் தேவை அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை உறுப்பினர்கள் இதனை கருத்தில் கொண்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள உயிரினங்களுக்கு கடந்த 40 நாட்களாக குடிநீர் தேவை மற்றும் தங்களால் முடிந்த உணவுத் தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.

கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த 40 நாளாக இன்று வரை அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிமெண்ட் தொட்டிகளை அமைத்து இருசக்கர வாகனங்களில் குழுவாக மலையின் கீழ் புறத்திலிருந்தும், மேல் பகுதியில் இருந்தும் கேன்களில் தண்ணீர் கொண்டு வந்து தொட்டிகளில் நிரப்புகிறார்கள், தினமும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீரினை நிரப்பி வைக்கிறார்கள்.

மலையில் உள்ள குரங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் வாரத்தில் மூன்று முறை வாழைப்பழங்களை உணவாக அளித்து வருகின்றனர்.

மேலும் கோடை காலம் முடியும் வரை இந்த உதவிகளை நாங்கள் செய்து கொண்டே இருப்போம் என நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story