இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கல்

திண்டுக்கல் அருகே பாதாள செம்பு முருகன் கோயில் சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் அருகே பாதாள செம்பு முருகன் கோயில் சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கன்னிவாடி அருகில் உள்ளது செம்பு முருகன் கோயில். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தினால் கோவில் நிர்வாகம் நீண்ட கியூவை அமைத்துள்ளது. பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் மற்றும் உத்திராட்ச மாலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கோயில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து பாதாள செம்பு முருகன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டது.

Tags

Next Story