பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடநூல் வழங்குதல்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடநூல் வழங்குதல்

நாகை மாவட்டம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடநூல் குறிப்பேடு வழங்கப்பட்டது.


நாகை மாவட்டம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடநூல் குறிப்பேடு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல் குறிப்பேடு வழங்குதல் மற்றும் பள்ளியிலேயே ஆதார் பதிவு புதுப்பித்தல் மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கும் முகாம் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் .என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் இன்று(10.06.2024) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. ஆதார் எண் பெறவும் மற்றும் புதுப்பித்திடவும் மாணவர்கள் ஆதார் சேவை மையத்தினை அணுகி சிரமப்படுவதனை தவிர்த்திட ELCOT நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ/ மாணவியர்களுக்கு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 88,647 மாணவ, மாணவியர்களுக்கு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மற்றும் ELCOT நிறுவன பணியாளர்கள் உதவியுடன் இன்று முதல் தொடர்ந்து பள்ளிகளில் நேரடியாக ஆதார் பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்ள திட்டமிப்பட்டுள்ளது.

மேலும் 2024-2025 கல்வியாண்டின் பள்ளியின் முதல் நாளிற்க்கு வருகை தரும் மாணவ, மாணவியர்கள் எடுக்கும் முடிவு பள்ளியின் இறுதிநாள் வரை செயல்பட வேண்டும். மாணவ, மாணவியர்கள் அனைவரும் சரியான நேரத்திற்க்கு பள்ளிக்கு வரவேண்டும் அதே சமயம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் வருகைக்குமுன் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு தேவையான ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர்.இரா.மாரிமுத்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.கா.சே.சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்க கல்வி) .சி.கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை கல்வி) எம்.ரவிச்சந்திரன், காடம்பாடி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்.எஸ்.இளமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story