கிள்ளியூர் திமுக சார்பில் திருச்செந்தூரில் நல உதவி வழங்கல்

கிள்ளியூர் திமுக சார்பில் திருச்செந்தூரில் நல உதவி வழங்கல்
நலஉதவி வழங்கிய திமுக- வினர் .
கிள்ளியூர் திமுக சார்பில் திருச்செந்தூரில் நல உதவி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றிய திமுக சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட திருச்செந்தூர் தொகுதி குமாரபுரம் பகுதி மாவீர நகரில் வசித்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அருந்ததிய மக்கள் சுமார் நூறு குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

குமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் கோபால் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சைனி கார்டன், கீழ் குளம் பேரூர் செயலாளர் எஸ் எம் கான், மருத்துவர் அணி கிள்ளியூர் தொகுதி துணை அமைப்பாளர் டாக்டர் பீட்டர், தொழிலாளர் அணி அமைப்பாளர் சபின் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story