ராசிபுரத்தில் திமுக இளைஞா் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பையடுத்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,
மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் வழிகாட்டுதலின்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான உயர்திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. அவர்களின் ஆலோசனைக்கிணங்க வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர் ஆகியோர் வழிகாட்டுதலில்,
இராசிபுரத்தில் அமைந்துள்ள அனைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக தலைவர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் கவிதாசங்கர் தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் முன்னிலையில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மா.கார்த்திக் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சுதாஜெயக்குமார், நகர இளைஞர் அணியை சேர்ந்த பாண்டியன் மற்றும் வார்டு இளைஞர் அணியை சேர்ந்த கிஷோர்,லவக்குமார், சத்யானந்த், சரவணன், தனுஷ், பிரசாந்த்,சிவனேஷ் உட்பட இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.