ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவிகள் 

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட வண்டிக்கார தெருவில் ரஜினி காந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி சக்தி தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் கிரைண்டர், தையல் இயந்திரம், புடவை, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனை தொடர்ந்து விஜயபுரம் அரசு தாய், சேய் மருத்துவமனையில் தாய்மார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து தெற்கு வீதியில் உள்ள கௌரிசாமி பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் ரஜினி மோகன், தொழிலதிபர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story