மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் !

மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் !

 நலத்திட்ட உதவி 

பள்ளிபாளையத்தில் மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் கல்வி மையத்தின் சார்பாக 61-வது மாதாந்திர கூட்டம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மகரிஷி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து பல்வேறு ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட வல்லுநர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த மாதாந்திர கூட்ட நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், நலிவடைந்த ஜோதிடர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரபல யூட்டியூப் சேனல் புகழ் திண்டுக்கல் சின்ராஜ் தலைமை தாங்கினார் . இந்த கூட்டத்தில் ஜோதிடம் குறித்த பல்வேறு விவரங்கள் எடுத்துரைத்து பேசப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்விற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பி.ஏ.முகுந்தன் முரளி செய்திருந்தார்.

Tags

Next Story