தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை தொடர்ந்தும் , மே 1 தொழிலாளர் தினத்தை தொடர்ந்தும் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் நல சங்க நிறுவன தலைவர் ஆறுமுகம் சிறப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடியதுடன் தூய்மை பணியாளர்கள் உட்பட ஏழை எளிய மக்கள் 60 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் நிகழ்ச்சியில் படூர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தொகுதி செயலாளர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் மாரி, தொழிற்சங்க நிர்வாகிகள் படூர் போஸ்,விக்னேஷ் பாபு ,ஆரோக்கியராஜ் ,கண்டிகை புருஷோத்தமன், குமார், வினோத் இல்பட், கோவளம் பத்மாவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.