கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல்

கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி  உபகரணங்கள் வழங்கல்

கல்வி உபகரணங்கள் வழங்கல் 

விருதுநகரில் விருதை விழுதுகள் மற்றும் மித்ரு அறக்கட்டளை சார்பில் 75 மாணவ மாணவிகளுக்கு சுமார் ரூ1.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டலத்தில் வைத்து விருதை விழுதுகள் மற்றும் மித்ரு அறக்கட்டளை இணைந்து நடத்தும் கல்வித் திருவிழா நடைபெற்றது. இந்தக் கல்வித் திருவிழாவில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில முடியாத ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

. இந்த நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் , இயற்பியல் துறை பேராசிரியர் ஜெயக்குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்த அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பபு வரை கல்வி பயில முடியாத 25 மாணவவர்கள் மித்ரு அறக்கட்டளை சார்பாக தத்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்கள். மீதமுள்ள 50 மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் கல்வி கற்பதற்கான சுமார் 50 ஆயிரம் மதிப்பீட்டில் அவர்கள் கல்வி கற்பதற்கான கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். மேலும் சிறப்பாக பணியாற்றிய 10 சமூக ஆர்வலர்களுக்கு இந்த அறக்கட்டளையால் விருதுகளும் வழங்கப்பட்டன

Tags

Next Story