நாட்றம்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கல்

நாட்றம்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கல்

இலவச சைக்கிள் வழங்கிய ஆட்சியர்

நாட்றம்பள்ளியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்128 மிதிவண்டிகள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில்198 மிதிவண்டிகள் மொத்தம் 326 விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவிகளுக்கு தினம் தினம் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக செல்ல வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். தமிழ் வழி கல்வி முக்கியத்துவம் குறித்தும், அதே போல் பெண்கள் பயில்வது முக்கியம்.

ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் அந்த குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றார். இளமையில் கற்க வேண்டும். தொடர்ந்து படித்தால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story