விலையில்லா சைக்கிள் வழங்கல்

விலையில்லா சைக்கிள் வழங்கல்

விலையில்லா மிதிவண்டி வழங்கல் 

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ புகழேந்தி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி, பகண்டை, சின்னதச்சூர், முட்டத்தூர், பனையபுரம், தென்பேர், தும்பூர், சிந்தா மணி, எண்ணாயிரம், பொன்னங்குப்பம் ஆகிய 10 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா, விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர்அறிவழகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் துணை தலைவர் பாலாஜி, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பாபு ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார். புகழேந்தி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 10 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்,

இதில்பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்திப், நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்டத் தலைவர் ஹரிஹரன், கண் காணிப்பு குழு எத்திராசன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ராதா நன்றி கூறினார்.

Tags

Next Story