அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

சேந்தமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் - பொன்னுசாமி எம்.எல் வழங்கினார்

சேந்தமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் - பொன்னுசாமி எம்.எல் வழங்கினார்

சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய திமுக செயலாளா் அசோக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் எம்.எல்.ஏ., பொன்னுசாமி பங்கேற்று மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். பின் அரசு பள்ளி மாணவிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்கள், கல்வித்துறையின் சார்பில் கல்வி உதவி தொகை, மாணவிகளை ஊக்கிவைக்கும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவிகள் அதை பயன்படுத்திக்கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என அறிவுருத்தினார். விழாவில் பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணகுமார், அட்மா குழு துணைத்தலைவர் தனபாலன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்த்பாபு, வார்டு கவுன்சிலர்கள், உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், ஆசிரியர் மாதேஸ்வரன், இருபால் ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story