பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
சைக்கிள் வழங்கும் நிகழ்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி முன்னிலையில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 984 மாணவ - மாணவியருக்கு, அமைச்சர் அன்பரசன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்."
Next Story