இலவச எரிவாயு இணைப்பு வழங்கல்

X
புளியங்குடியில் 150 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
புளியங்குடியில் 150 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 150 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
நகர பாஜக தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். இளைஞா் அணித் தலைவா் சேகா் முன்னிலை வகித்தாா். தென்காசி மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளரும் , ஸ்டாா்ட் அப் பிரிவு மாநில தலைவருமான ஆனந்தன் கலந்து கொண்டு பெண்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கிப் பேசினாா். இதில், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியத் தலைவா் சண்முகராஜ், வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றியத் தலைவா் ராம்குமாா், புளியங்குடி நகர நிா்வாகிகள் மாரியப்பன் , நீராத்துலிங்கம், முகேஷ், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tags
Next Story
