கூத்தக்குடி கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா கலெக்டர் வழங்கல்
கூத்தக்குடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றுாண்டு விழாவையொட்டி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றுாண்டு விழாவையொட்டி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரிய தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், புதுஉச்சிமேடு, கூத்தக்குடி, நின்னையூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நத்தம், ஆதிதிராவிட நத்தம், இதர அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 500 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், தாசில்தார் பிரபாகரன், பி.டி.ஓ., ஜெகநாதன், ஊராட்சி தலைவர்கள் சுகன்யா நாராயணசாமி, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.