பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கல்

பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கல்
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
தேனி மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோட்டங்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இலாபகரமான கால்நடை பண்ணைத்தொழில் மேற்கொள்வதற்கு தீவன செலவினை குறைப்பது இன்றியமையாததாகும். பால் உற்பத்தியில் தீவன செலவினம் 70% உற்பத்திக்கான செலவினமாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே அதிக சத்து மிக்க உயர் ரக அதிக மகசூல் தரக்கூடிய கலப்பின பசுந்தீவனத்தை ஊடுபயிராக பயிரிடும்படியும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் சத்து மிக்க கால்நடை தீவனத்தை, கால்நடைகளுக்கு வழங்குதல் மூலம், பாலில் உள்ள கொழுப்புச்சத்து அதிகமாகி தரமான பால் உற்பத்திக்கு வழி செய்வதோடு விவசாயிகளுக்கும் அதிக அளவு பால் உற்பத்தியினை குறைந்த செலவில் முதலிடு செய்வதன் மூலம் லாபத்தை ஈட்டுவதோடு தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏதுவாகும். இதனை கருத்தில் கொண்டு தேனி மாவட்டத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கு கால்நடை பராமரிப்புத்துறையின் ஒருங்கிணைந்த தீவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ்பசுந்தீவனத்தை ஊடுபயிராக தோட்டங்கள்/ பழத்தோட்டங்களில் பயிரிட 250 ஏக்கர் குறியீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.7,50,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன வசதியுடன் நன்கு நிறுவப்பட்ட தோட்டம் / தோட்டங்களை வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் விரும்பும் தீவனப்பயிர்களை ஊடுபயிராக,

0.50 ஏக்கருக்கு குறையாமல் ஒரு ஹெக்டேர் வரை பாசன வசதியின் கீழ் பயிரிடத்தயராக உள்ளவர்கள் மற்றும் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பராமரிக்க தயராக உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். புற்கள், பருப்பு வகைகள், மேய்ச்சல் புற்கள் போன்ற வற்றாத தீவனப்பயிர்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3000/- சாகுபடி ஊக்குவிப்புத்தொகையாக வழங்கப்படும்.

இச்செலவினத்தில் தங்கள் நிலத்தை பண்படுத்துவது, விதைகள் வாங்குவது , பயிரிடுவது, களை எடுப்பது போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம். சிறு,குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவர், மேலும் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தைச் சேர்ந்த விவசாயிகளாக இருக்க வேண்டும்.

நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள், அதிகப்படியான தீவனத்தை மற்ற விவசாயிகளுக்கு குறிப்பாக நிலமற்ற கால்நடை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலையில் விற்க விரும்பும் விவசாயிகள், மற்றும் அதிகமாக உற்பத்தி ஆகும் தீவனத்தை சைலேஜ் முறையில் சேமித்துவைக்க விரும்புவோர்க்கு இத்திட்டம் பயனுள்ளதாகும். விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட வி;ண்ணப்பத்தை,

உரிய ஆவணங்களுடன் 05.07.2024-க்குள் சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Tags

Next Story