பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில், 4 பேருக்கு செயற்கை கால் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கால் வழங்கப்பட்டது.
பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த காவேரி ஆர்.செந்தில்நாதன், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொரட்டூர் ஹரிஹரன், செருபாலக்காடு நாகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி ஹாஜாமுகைதீன் இந்த நால்வரின் கோரிக்கையை ஏற்று, பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் மற்றும் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், சென்னை முக்தி பவுண்டேஷன் இணைந்து, தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால் நான்கு பேருக்கு வழங்கினர்.
லயன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாண்டியராஜன் ஏற்பாட்டில், சங்க செயலாளர் நடராஜன், செய்தி தொடர்பாளர் பிரதீஸ் ஆகியோர் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், லயன்ஸ் சாசனத் தலைவர் எம்.நீலகண்டன், மாவட்டத் தலைவர் கே.இளங்கோ, இரண்டாம் துணைத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.