தூத்துக்குடி : நிவாரண உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி : நிவாரண உதவிகள் வழங்கல்

தூத்துக்குடியில் நிவாரண உதவிகளை வழங்கல்

தூத்துக்குடியில் 24 மனை சாது தெலுங்கு செட்டியார் சமுதாய தலைமைச் சங்கம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகரில் கடந்த 17 18 ஆம் தேதியில் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர் தன்னார்வல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 24 மனை சாது தெலுங்கு செட்டியார் சமுதாய சென்னை தலைமைச் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாநகர தெலுங்கு செட்டியார் சமுதாய சங்கம் இணைந்து அரிசி மளிகை பொருட்கள் வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் மாநகர முன்னாள் மேயர் மற்றும் தலைமைச் சங்க தலைவருமான நடராஜன் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் பெருமாள், மாநில இணைச்செயலாளர் ஞானபிரகாசம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சங்க செயலாளர் பாலமுருகன், தலைவர் மனோகரன் , நிர்வாகிகள் அம்பை முருகன் , சுந்தர், ஏகாம்பரம், ரகுநாதன் , சரவணன் , மீனாட்சி சுந்தரம் , அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் மேயர் நடராஜன் பேசும்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பொதுமக்களுக்கு தலைமைச் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும் மேலும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரண உதவிகள் மற்றும் பாதிப்பில் இருந்து பொதுமக்களுக்கு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுத்ததற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story