சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கல்

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டியில் 1,05,000 மானியத்துடன் புதிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி ஷா நகர் கார்னரில் நடைபெற்றது. பள்ளப்பட்டியைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவருக்கு SDTU எனப்படும் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி SDTU தொழிற்சங்க கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க கரூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் பாஷா, மாநில பொதுச்செயலாளர் ரவூஃப் நிஸ்த்தார் பூட்டோ, சமூக நல ஆர்வலர் பாப்புலர் அபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் SDPI கட்சியின் பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக் தீன், பள்ளப்பட்டி நகர துணைத் தலைவர் காஜா மொய்தீன்,கரூர் மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சாதிக் அலி,பள்ளப்பட்டி நகர செயலாளர்கள் சையது அப்பாஸ் அலி, முகமது அனிபா,பள்ளப்பட்டி நகர பொருளாளர் சேக் பரீத், லிங்கமநாயக்கன் பட்டி கிளை தலைவர் முகமது முஸ்தபா, மணிமொழி மௌலானா, ஈரோடு மாவட்ட SDTU தொழிற்சங்க தலைவர் அப்துல் ரஹ்மான்,ஆட்டோநிலைய பொருளாளர் சேக் பரீத்,சக ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மானியம் பெற்ற ஆட்டோவை பயனாளர் இக்பால்-க்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மானியத்துடன் கூடிய ஆட்டோ பெறுவதற்கு இரண்டு பேர் மனு கொடுத்தனர்.

Tags

Next Story