மக்காச்சோளம் பயிரிட மானியம்

மக்காச்சோளம் பயிரிட மானியம்

சக்கந்தியில் மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.  

சக்கந்தியில் மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
சிவகங்கை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நீர்வள நிலவளத் TN-IAMP உப்பாறு பாசன திட்டம் சக்கந்தி விவசாயி முருகனுக்கு மானிய விலையில், மக்காச்சோளம் விதை 8கிலோ, பவேரியா பேசியான 250கிராம், வேப்பண்ணை மருந்து 1லிட்டர், அசோஸ்பைரில்லம் 1கிலோ பாஸ்போபேக்டீரீயா 1கிலோ , இனக்கவர்ச்சி பொறி 12 ஆகியவை வழங்கப்பட்டன. இதனை விவசாயி ரூபாய் 1200 கட்டி வாங்கியுள்ளார். மீண்டும் பின்னேற்பு மானியமாக ரூ.500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் சிவகங்கை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கி கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி தெரிவித்துள்ளார்

Tags

Next Story