பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கல்

பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

ரூ.2.94 கோடி மதிப்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 310 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் இன்று (13.12.2023) வழங்கினார். அ

னைவருக்கும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 இலட்சம் வரையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேருவதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை சேர்ந்த 56 நபர்களுக்கு இன்றையதினம் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மணலாறு பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில், வருவாய்துறையின் சார்பில் 5 நபர்களின் குடும்பத்தினருக்கு இயற்கை மரண நிதி உதவித்தொகையாக ரூ.1.07 இலட்சமும், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.1,080 மதிப்பிலான தார்பாலின் மற்றும் ஜிங்க் சல்பேட் 2 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சுயதொழில் தொடங்க 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.13.50 இலட்சத்திற்கான கடனுதவியும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்துடுப்பு மருந்துத்துறை சார்பில் ரூ.10,000 மதிப்பிலான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஊட்டச்சத்து பெட்டகம் 5 பயனாளிகளுக்கும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.2,000 மதிப்பிலான மக்களைதேடி மருத்துவம் மருத்துப்பெட்டகம் 4 பயனாளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.24,360 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டி 5 மாணவர்களுக்கும்,

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீடு அட்டை 56 பயனாளிகளுக்கும், 230 நபர்களுக்கு இணையதள பதிவு சான்றுகள் என மொத்தம் 310 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பிலான பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணியன், ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவர் இங்கர்சால் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, உத்தமபாளையம் வட்டாட்சியர் சந்திரசேகரன், ஹைவேவிஸ், பேரூராட்சி ஹைவேவிஸ் பேரூராட்சித் துணைத்தலைவர் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story