நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கீழ்கூத்தப்பாக்கத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கீழ்கூத்தப்பாக்கத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளான 111 பேருக்கு ரூ.23 லட்சத்து 15 ஆயிரத்து 291 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி களை வழங்கினார். முன்னதாக இம்முகாமில் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்கை கலெக்டர் பழனி பார்வையிட்டார்.

இம்முகாமில் வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷா, விழுப்புரம் கோட்டாட்சியர் காஜா சாகுல்ஹமீது, சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவுதம், பிரேமா, அன்புமணி, ஊராட்சி ஒன்றியக் குழுதுணைத்தலைவர் பர்வகீர்த்தனா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, கீழ்கூத்தப்பாக்கம் ஊராட்சி மன்ற தலை வர் அன்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story