களியனூர் பகுதியில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் வழங்கல்

களியனூர் பகுதியில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

களியனூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் முகாமில் ரூபாய் 1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் முகாமில் ரூபாய் 1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் 127 பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இன்றுநடைபெற்றமக்கள்தொடர்புதிட்டம்முகாமில்கடந்த04.03.2024 முதல் 11.03.2024 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 127 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்குரூ.1 கோடியே 81 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர் கலைவாணி, ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story