வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் மனு

வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் மனு

மனு அளித்தவர்கள்

வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜவ்வாது ராமசமுத்திரம் கிராமம் பகுதியைச் சேர்ந்த சாமு 75 இவர் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை நாராயணபுரம் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் ,

மகன்கள் மோகன் குமார் சீனிவாசன் முகேஷ் கண்ணா ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து கொண்டு ஆற்று புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே காலகாலமாக பயன்படுத்தி வந்த வழியை விடாமல் தடுத்து வருகின்றனர் இதன் காரணமாக வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் இது வந்து பலமுறை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.

எனவே ஆதிகாலத்தில் இருந்து பயன்படுத்த வந்த இந்தப் பாதையை மீட்டு பொதுமக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags

Next Story