337 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

337 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலதிட்ட உதவிகள்

சிவகங்கையில் பல்வேறு துறைகளின் சார்பில் 337 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

சிவகங்கை நகராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் போற்றுகின்ற வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முத்தாய்பான திட்டமான ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 22.11.2023 அன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. முன்னதாக, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, உங்களைத் தேடி உங்கள் ஊரில், மக்கள் தொடர்பு முகாம், முதல்வரின் முகவரி, மக்கள் குறைதீர்க்கம் நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் போன்றவைகளை நடத்தி, அதன் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என மொத்தம் 13 துறைகளின் கீழ் 8,883 மனுக்கள் பெறப்பட்டு, 6,946 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.3,84,000/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மற்றும் சுயதொழில் வங்கிகடனிற்கான ஆணைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 41 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,900/- மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்ளையும், 02 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், தாட்கோ சார்பில் 01 பயனாளிக்கு ரூ.2,97,500/- மதிப்பீட்டில் வாகனத்திற்கு மானிய தொகைக்கான ஆணையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 116 பயனாளிகளுக்கு ரூ.6,39,000/- மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்பு பெட்டியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.48,000/- மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 13 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் ரூ.4,12,200/- மதிப்பீட்டிலான முதிர்வு தொகைக்கான ஆணைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.1,65,000/- மதிப்பீட்டிலான கடனுதவிக்கான ஆணைகளையும்,

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 01 பயனாளிக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.50,000/- மதிப்பீட்டிலான தொழில் தொடங்குவதற்கான மானியத்தொகைக்கான ஆணையினையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம்,சொத்து வரி விதிப்பில் பெயர் திருத்தம், புதிய வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வரி பெயர் மாற்றம்,பிறப்பு சான்றிதழ் நகல், இறப்பு சான்றிதழ் நகல் ஆகியவைகளுக்கான ஆணைகளும் என ஆக மொத்தம் 337 பயனாளிகளுக்கு ரூ.22,65,073/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

Tags

Next Story