தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

திருவண்ணாமலையில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கான 'செக்' வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலையில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கான 'செக்' வழங்கப்பட்டது.

தாட்கோ மூலம், தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.35,250/- மதிப்பில் பல்வேறு நல திட்ட உதவிகளுக்கான வங்கி வரைவோலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (08.12.2023) தாட்கோ மூலம், தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில், நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற 5 நபர்களுக்கு ரூ.35,250/- மதிப்பில் பல்வேறு நல திட்ட உதவிகளுக்கான வங்கி வரைவோலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற நபர்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கனகம்பட்டியை சேர்ந்த விஜயா என்பவர் பணியின்போது இயற்கை மரணமடைந்ததை தொடர்ந்து ஈமச்சடங்கு தொகை ரூ.5,000/- மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.20,000/- என மொத்தம் ரூ.25,000/-க்கான வரைவோலை விஜயா(லேட்) என்பவரின் வாரிசுதாரர் வெங்கடேசன் என்பவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற நபர்களின் குடும்பத்தை சார்ந்த பட்டப்படிப்பு படித்து வரும் மாணவன் ஹரிஹரன் என்பவருக்கு ரூ.1,750/- தொழில்நுட்ப படிப்பு படித்துவரும் மாணவி ஸ்ரீமதி என்பவருக்கு ரூ.6,000/- 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மோனிகா என்பவருக்கு ரூ.1,500/- மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி செஞ்சாள் என்பவருக்கு ரூ.1,000/- என மொத்தம் ரூ.35,250/-க்கான வங்கி வரைவோலை தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாட்கோ மேலாளர் ஏழுமலை மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story