திருப்பத்தூரில் ரூ.22.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பத்தூரில் ரூ.22.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

திருப்பத்தூரில் பல்வேறு துறைகள் மூலம் சுமார் 22.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேடையில் மாற்றுதிறனாளி பட்டதாரி பெண்ணுக்கு பணி வழங்கிய ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் கோட்டம், விசமங்கலம், பேராம்பட்டு பகுதிகளுக்கான சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நடைப்பெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். இந்த முகாமில் கோட்டாட்சியர் பானு, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்த முகாமில் முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சிறு குரு விவசாயிகள் சான்று, இயற்கை மரணம் உதவித்தொகை மற்றும் மருத்துவத்துறை தோட்டக்கலை என பல்வேறு துறைகள் மூலம் சுமார் 22.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்று பேசிய ஆட்சியர் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்திரவுக்கு இணங்க பொதுமக்களுக்கு பல்வேறு துறையின் சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முகாம் மேடையில் குரும்பேரி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் இந்துமதி(26) என்பவர் தன் தாய் இறந்துவிட்டார் என்றும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆட்சியர் அதை தொடர்ந்து பணி வழங்க உத்திரவிட்டார்.

Tags

Next Story