காஞ்சிபுரத்தில் 13 விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில், 8 விவசாய பயனாளிகளுக்கு ரூ.7.40 இலட்சம் மதிப்பில் பயிர் கடனும், 2 விவசாய பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பானும் , 1 விவசாய பயனாளிக்கு உளுந்தும், 1 விவசாய பயனாளிக்கு தார்பாலினும், 1 விவசாய பயனாளிக்கு திரவ உயிர் உரங்களும், என மொத்தம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.20,796 மதிப்பில் மானியத்துடன் கூடிய இடு பொருட்களும்,ஆக மொத்தம் 13 விவசாய பயனாளிகளுக்கு, ரூ.7.60 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.