கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி திருவிக நகர், இந்திரா நகர் பகுதியில் கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாநகரில் கடந்த 17 ,18 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது தற்போது சில பகுதிகளில் மழை நீர் வடிந்துள்ள நிலையில் ஏராளமான பகுதிகளில் மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள திருவிக நகர் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் காரணமாக கடந்த 9 நாட்களாக அந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வீடுகளை சுற்றி வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த மழை நீர் அசுத்த நீராக மாறி துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதை அடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பாதிக்கப்பட்ட தங்களுக்கு கெட்டுப்போன உணவுகளையே வழங்கி வருகிறார்கள் இதனால் குழந்தைகள் முதியவர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது மேலும் தங்களுக்கு மருத்துவ உதவி இதுவரை கிடைக்கவில்லை பாதிக்கப்பட்ட தங்களை எம் பி, அமைச்சரோ யாரும் இதுவரை சந்திக்கவில்லை என குற்றம் சாட்டினர் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்

Tags

Next Story