பாலாற்றை பராமரிக்காமல் நீர்வளத்துறை மெத்தனம்

பாலாற்றை பராமரிக்காமல் நீர்வளத்துறை மெத்தனம்

பாலாற்றை பராமரிக்க கோரிக்கை

பாலாற்றில் நடக்கும் சட்டவிரோத தண்ணீர் திருட்டு , பராமரிப்பற்ற நிலையை நீர்வளத்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலாற்றின் நடுவே, சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் வாயிலாக குடிநீர் திருட்டு, ஆயிரக்கணக்கான மரங்கள் முளைத்து காடு போல மாறியது மற்றும் ஆற்றின் கரைகளில் குப்பை கொட்டுதல் தொடர்வது, நீர்வளத்துறை பராமரிப்பு இல்லாததால், பாலாற்றின் நிலைமை மோசமாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திதுர்கம் மலையில், பாலாறு உற்பத்தியாகிறது. கர்நாடகாவில், 93 கி.மீ., ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ., துாரம் பாய்கிறது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 90 கி.மீ., பாய்ந்து, வாயலுாரில் கடலில் கலக்கிறது. பாலாறு பாயும் படுகையின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய் வாயிலாக, 4 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலாக, பாலாற்றை நம்பி விவசாய பணிகள் நடக்கின்றன. மேலும், ஐந்து கூட்டு குடிநீர் திட்டம், பாலாற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story