வருவாய்துறையினரின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அரசு அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் காஙகேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த போராட்டத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், நிலை வருவாய் அலுவலர் மற்றும் இடை வருவாய் அலுவலர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் உடனே நிரப்பிட வேண்டும் வருவாய் மற்றும் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்டப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகிவிட்டது உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இக்கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயில் காத்திருப்பு போராட்டமாக கடந்த 22ஆம் தேதி வியாழக்கிழமை சுமார் 20க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தை நடத்தினர். மேலும் இக்கோரிக்கைக்கு அரசு அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே நிறைவேற்ற வேண்டும், அவ்வாறு நிறைவேற்றா விட்டால் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவே அடுத்த கட்ட போராட்டமாக தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். அரசு அலுவலகங்களில் பெரும்பாலான அலுவலர்கள் போராட்டம் காரணமாக வேலை நிறுத்தத்தில் இருப்பதால் அரசு துறையை நாடி வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.