பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் - எஸ்பி தகவல்
எஸ் பி ஹர்ஷ் சிங்
நாகை காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 152 வாகனங்களை வருகிற 18.03.2024ந் தேதி பொது ஏலம் மூலம் அரசுக்கு ஆதாயம் செய்திட ஏதுவாக பழைய ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வருகின்ற 17.03.2024 ஞாயிறுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை வாகனங்களை நேரில் பார்வையிட்டுக் கொள்ளலாம். வருகின்ற 18.03.2024ந் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும். பொது ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினம் (18.03.2024) காலை 08.00 முதல் 09.00 மணிக்குள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் நேரில் ஆஐராகி தங்களது பெயர் விலாசத்தினை பழைய ஆயுதப்படை வளாகத்தில் வாகனம் ஏலம் விடும் குழுவிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பொது ஏலம் மூலம் அதிக விலை கோரும் நபர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும். மேலும் ஏலம் எடுத்த வாகனங்களுக்கான தொகையை அன்றைய தினம் உடன் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04365/247430