மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகின்றன

மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகின்றன.

கோவை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 61 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 66 வாகனங்கள் வரும் 5ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம், தேவம்பாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், அன்னூர், பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலுக்கா, ஆனைமலை மற்றும் ஆழியார் காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 04.11.2023 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம் எனவும் வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story