ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தலில் ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில்,பொதுமக்கள் ஆக்கிரமிப்பை மீட்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story