மூடப்படாமல் இருக்கும் குடிநீர் வால்வு தொட்டி- பொதுமக்கள் கோரிக்கை

மூடப்படாமல் இருக்கும் குடிநீர் வால்வு தொட்டி- பொதுமக்கள் கோரிக்கை

மூடபடாமல் இருக்கும் குடிநீர் தொட்டிகள்

ரோட்டோரத்தில் இரண்டு அடி ஆழத்திற்கு காவிரி குடிநீர் வால்வு தொட்டி தோண்டப்பட்டு தொட்டி காங்கிரட் மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் பல பகுதிகளில்10 அடி சாலையில் ரோட்டோரத்தில் இரண்டு அடி ஆழத்திற்கு காவிரி குடிநீர் வால்வு தொட்டி தோண்டப்பட்டு தொட்டி காங்கிரட் மூடி இல்லாமல் உள்ளது.பிரிட்டோ மழலையர் பள்ளி அருகே திறந்த நிலையில் தொட்டி உள்ளதால் சிறுவர்கள் கவனக்குறைவாக அதில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது

.பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் சிறுவர்கள் கவனக்குறைவாக உள்ளே இறங்கினால் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், தொட்டிகள் திறந்த நிலையில் உள்ளதால் மழைநீர் தேங்கி அதிலிருந்து டெங்கு கொசுக்கள் உருவாகி வருகிறது.அலிகார் சாலை இரண்டாம் நம்பர் ரேஷன் கடை எதிர்ப்புறம் முஹம்மது கோயா தெரு நூர் பள்ளிவாசல் எதிரிலும் இதுபோல் முஹம்மது கோயா தெரு கிழக்கு,பழைய இரும்பு கடை எதிரே செல்லும் தெரு,சேக் தாவூத் தெரு (பத்தாயிரம் தெரு) இன்னும் பல இடங்களில் குடிநீர் வால்வு தொட்டிகள் மூடாமல் இருப்பதால் சிறிய குழந்தைகள் தொட்டியில் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாக கவனத்துக் கொண்டு சென்றும் தொட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையிலே தொட்டி உள்ளது.என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story