தூத்துக்குடியில் பொதுமக்கள் புகார்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில் பொதுமக்கள் புகார்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

தூத்துக்குடி எம்.கே தெரு, குமார் தெரு, உள்ளிட்ட பகுதியில் குடிநீரில் கழிவுநீர் வருவதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு எம்.கே.தெரு, குமாரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கலந்து கழிவுநீர் வருவதாக வந்த பொது மக்களின் புகாரை அடுத்து அப்பகுதியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அவரிடம் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் சீராக வரவில்லையென்றும், குடிநீர் வரும்பொழுது அதில் கழிவு நீரும் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்கள். தொடர்ந்து மழை காலத்திற்கு முன் கழிவு நீர் வடிகால்கள் தூர் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வடிகால்களை தூர்வாரி சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து குடிநீர் வரும் பைப் லைன்களை உடனடியாக சரிசெய்யும் அவர் உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதி பொதுமக்களைச் நேரில் சந்தித்து அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.

Tags

Next Story