டாஸ்மாக் கடை அகற்றக்கோரி பொதுமக்கள் புகார்

ராசிபுரம் பட்டணம் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றக்கோரி பொதுமக்கள் புகார் அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மதுபான கடைகள் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் ராசிபுரம் பட்டணம் - புதுப்பட்டி சாலையில் அரசு மதுபான கடை அக்கா பார் மதுபான (கடை எண் 5971) கடை செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் மதுபானம் வாங்கும் மது பிரியர்கள் அங்கு சாலை ஓரமாகவும் மற்றும் குடியிருப்பு உள்ள இடங்களிலும் அமர்ந்து மதுபானம் குடித்துவிட்டு பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தகராறு செய்வதாக தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் ஒரு சில மது பிரியர்கள் மது அருந்திவிட்டு தகாத வார்த்தை பேசி பல பேரிடம் தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதி, வயல்வெளியில் வந்து கூட்டமாக சேர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டு உடைத்து விட்டு, அங்கு கிடைக்கும் காய்ந்த மக்காச்சோள பயிர்கள், நீலகிரி தைல மர சருகுகள் ஆகியவற்றில் தீ வைத்து வருகின்றனர்.

இதனை அடுத்து ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூர் பத்தாவது (10) வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் , பெண்கள் அப்பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கடை முன் போராட்டம் மறியல் செய்ய ஏற்பாடு செய்தனர். தகவல் அறிந்து வந்த ராசிபுரம் காவல் ஆய்வாளர் கு. செல்வராசன், சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களிடத்தில் பேசினார். மேலும் பொதுமக்கள் இந்தப் பகுதியில் யாரும் மது வாங்கி வந்து அமர்ந்து குடிக்க கூடாது என்றும் மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி மேலும், ராசிபுரம் - புதுப்பட்டி மெயின் ரோடு ஆக இருப்பதால் அருகில் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடம் உள்ளது. என தெரிவித்து போராட்டம் கைவிட்டு கோரிக்கை விடுத்து காவல் ஆய்வாளர் இடத்தில் அனைவரும் கையொப்பமிட்டு புகார் மனு அளித்தனர். இதனை அடுத்து அவர் மாவட்ட நிர்வாகம் இடத்தில் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் கு.செல்வராசன், உத்திரவாதம் அளித்ததன் அடிப்படையில் மேலும் காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல், காவலர் ராஜ் குமார் ,மாதவன், பொதுமக்கள் இடம் எடுத்து கூறினர் இதை அடுத்து அப்பகுதியில் இருந்த பெண்கள் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story