நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ - பொதுமக்கள் பாராட்டு
செருக்கனூர் கிராமத்தில் இருந்து திருத்தணி வரை பேருந்து சேவை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ சந்திரனை பொதுமக்கள் பாராட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செருக்கனூர் கிராமத்தில் இருந்து திருத்தணி வரை பேருந்து சேவை வசதியை ஏற்படுத்தி தருமாறு கிராம பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடத்தில் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றிடும் விதமாக செருக்கனூர் கிராமத்தில் இருந்து திருத்தணி வரை செல்லக்கூடிய பேருந்து வழித்தடத்தை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் கொடி அசைத்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களோடு பயனம் மேற்க்கொண்டார். செருக்கனூர் கிராமத்தில் இருந்து முதல் முறையாக பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரனுக்கு கிராம பொதுமக்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
Next Story