புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம், கரிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட சித்தாமூர் காலனியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துாண்களில் விரிசல் ஏற்பட்டு, துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளதால், நீர்த்தேக்கத் தொட்டி உறுதித் தன்மையை இழந்துள்ளது. தற்போது, குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள நீர் போதுமானதாகவும் இல்லை. எனவே, பழைய தொட்டியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும், அதே பகுதியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story