பஞ்சாயத்து தலைவரிடமிருந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பஞ்சாயத்து தலைவரிடமிருந்து அகற்ற பொதுமக்கள்   கோரிக்கை

திருப்பத்தூரில் பொது வழியை முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துவரும் பஞ்சாயத்து தலைவர் அதை அகற்ற கோரி பொதுமக்கள் ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்


திருப்பத்தூரில் பொது வழியை முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துவரும் பஞ்சாயத்து தலைவர் அதை அகற்ற கோரி பொதுமக்கள் ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொது வழியை முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துவரும் பஞ்சாயத்து தலைவர் அகற்ற கோரி பொதுமக்கள் ஜமாபந்தி கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்கோட்டை அருகே உள்ள கோவிலூர் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் செல்வதற்கு சாலைவசதி இல்லை என கூறப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு கூட வழியில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றன.

மேலும் அப்பகுதிமக்கள் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை பொதுவழியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி என்பவர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுவழியை முள்வேலி அமைத்து ஆக்கிரமித்து செய்துள்ளதாக அப்பாக்குதிமக்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அப்பகுதிமக்கள் பலமுறை மனுஅளித்தும் இதுவரை அந்த மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள முள்வேலியை அகற்றிவிட்டு தங்களுக்கு கால்வாய் மற்றும் பொது வழியை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதிமக்கள் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இனியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தினால் தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, உள்ளிட்டவைகளை தாசில்தாரிடம் ஒப்படைத்து விடுவோம். இந்தநிலை நீடித்தால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story