சித்தாமூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சித்தாமூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சுகாதார வளாகம்

சித்தாமூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் அருகே பேரம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, 2012ம் ஆண்டு ஏரிக்கரை அருகே குளியலறை, கழிப்பறை, துணி துவைக்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன்,

பொது மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதை அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல் சுகாதார வளாகத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்ததால், தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகத்தை பயன்படுத்த பொதுமக்கள் விருப்பம் காட்டவில்லை. இதனால், மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் தற்போது பழுதடைந்துள்ளதால்,

மகளிர் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story