பேருந்து நிறுத்த நிழற்கூட கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

பேருந்து நிறுத்த நிழற்கூட கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

பேருந்து நிறுத்த நிழற்கூட கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
சுகாதாரமற்ற நிலையில் உள்ள பேருந்து நிலைய நிழற் கூட கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையத்தை இணைக்கும் சாலையாக ஆவத்தி பாளையம் பகுதி உள்ளது . இங்கு ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ஈரோடு குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூட கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், நிழற்கூட கட்டிடம் மது பிரியர்களின் கூடாரமாக மாறி, பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில்கள், குப்பைகள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. மேலும் பேருந்து நிறுத்த கட்டிடமே தெரியாத அளவிற்கு அதிக ,அளவு பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டுள்ளது, இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் பொழுது, தினந்தோறும் சம்பளத்திற்கு பணியாற்றும் ஆல்டிங் தொழிலாளர்கள் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஆவத்திப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் கூடுவது வழக்கம் . மேலும் அப்படி தறிப்பட்டறைகளுக்கு வேலைக்கு வரும் ஒரு சில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஒரு சிலர் இந்த நிழற் கூடத்தில் படுத்து உறங்குகின்றனர். ஒரு சில நேரங்களில் கூட்டாக மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி செல்வது போன்ற செயல்களை செய்கின்றனர். மேலும் மது போதையில் நிழற் கூட கட்டிடத்திற்கு உள்ளேயே சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களும் செய்து வருவதால் மிகுந்த துர்நாற்றம் அடிக்கும் பகுதியாக மாறி உள்ளது . பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் . தொடர்ந்து இந்த பகுதிகளை பள்ளிபாளையம் போலீசார் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ரவி அவர்கள் கூறும் பொழுது, இரண்டு தினங்களுக்குள் கட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், முழுவதும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .பேருந்து நிறுத்த நிழற்கூட கட்டிடம் பொதுமக்கள் பேருந்து பயணிகள் பயன்படுத்தும் வகையில், முறையான பராமரிப்பு செய்யப்படும் என தெரிவித்தார் .
Next Story


