பேரி கார்டுகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை

விபத்தை ஏற்படுத்தும் பேரி கார்டுகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக பல்வேறு இடங்களில், பாதுகாப்பு பணியின் ஒரு பகுதியாக பேரிக்காடுகளை பல்வேறு இடங்களில் போலீசார் வைத்திருந்தனர். பேரிகார்டுகள் தேவைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டர்கள் பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படும் இடங்களில் வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அமைக்கப்பட்ட பேரி கார்டுகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால் ஆங்காங்கே சாலையோரம் சரிந்து கிடைக்கிறது. இரவு நேரத்தில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் போலீசார் இது குறித்து உரிய கவனம் செலுத்தி நகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தப்படாமல் உள்ள பேரிக்காடுகளை முறைப்படுத்தி அகற்றும் வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story