கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர் கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்யூர் கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூணாம்பேடு பஜார் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி, துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலையில் இருந்தது. மேலும், மழை நீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், முத்தாலம்மன் கோவில் தெருவில், இரண்டு ஓரங்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதிவாசிகள் மழைநீர் வடிகால்வாயை கழிவுநீர் கால்வாயாக பயன்படுத்தி வருகின்றனர். கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்க, அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், கொசு மருந்து அடிக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வாரம் ஒரு முறை, குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்கவும், கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் அகற்றவும், திறந்த நிலையில் உள்ள கால்வாய்க்கு மூடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story