சாலையை சீரமைக்க கோரிக்கை
குண்டும் குழியுமான சாலை
சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் மாங்கால் சிப்காட், செய்யாறு சிப்காட் உட்பட பல தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தாலுக்காவை சுற்றி பல்வேறு குவாரிகள் உள்ளன. மாங்கால் கூட்ரோடு, ஐயங்கார்குளம் கூட்ரோடு, தூசி-மாமண்டூர் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. மாங்கால் கூட்ரோடு முதல் பாலாறு மேம்பாலம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story