பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சாலையை சீரமைக்க கோரிக்கை
தர்மபுரி மாவட்டம்,தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நூல் அல்லி மற்றும் உழவன் கொட்டாய் கிராமங்கள்,இந்த இரு கிராமங்களுக்கு இடையே பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி கல்லூரி மற்றும் வேலை நிமித்தமாக தர்மபுரிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதையொட்டி தர்மபுரியில் இருந்து நூல் அல்லி வழியாக உழவன் கொட்டாய்க்கு 40, 43 ஆகிய அரசு டவுன் பஸ்கள் 10 முறை தினமும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நூலஅள்ளி முதல் உழவன் கொட்டாய் வரையிலான இரண்டு கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக வாகனப் போக்குவரத்துத்துக்கு உதவாத நிலையில் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக எந்தவொரு மேம்பாட்டு பணிகளும் செய்ய வில்லை.
ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்பட்டும் எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்ய வில்லை. இந்த சாலை வழியாக தர்மபுரி நகருக்கு தனியார் நிறுவன வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் இந்த சாலையை கடந்து போகிற போது வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலை மேம்பாடு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து நூலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பச்சியம்மாள் கூறும் போது,நூலஅள்ளியில் இருந்து உழவன் கொட்டாய் செல்லும் கிராம சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை இந்த சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரஉள்ள பருவமழைக்கு முன்பாவது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கூறினார்.