சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூர் அருகே சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை. கரூர் மாவட்டம், புகழூர் வட்டம்,நஞ்சை புகழூரையும், புஞ்சை புகழூரையும் இணைக்கும் முக்கிய பகுதியாக இது இருந்து வருகிறது. இங்கு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நியாயவிலைக் கடை, போஸ்ட் ஆபீஸ், மற்றும் கண்டியம்மன் கோயில், புளிய மரத்து கோவில், சிவன் கோயில் அனைத்தும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இது மூன்று ரோடுகளையும் இணைக்கும் முக்கிய இடமாக உள்ளதால் இங்கு பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். கால்நடைகளும் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றன. இரவு நேரங்களில் இந்த பாதையை பயன்படுத்தும் பொழுது, உடைந்த சாக்கடை பால குழிக்குள் விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக சரி செய்து பொதுமக்களுக்கு இடையூறு நடைபெறாமல் இருக்க, உரிய முறையில் சீரமைத்து , நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலையில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இங்கு மழைக்காலங்களில் கொசுக்கள் மூலமாகவும், வேறு சில விஷ ஜந்துக்கள் மூலமாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சீரமைத்து அச்சமின்றி செல்லும் வகையில் ஊராட்சி, நகராட்சி, மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story