ஆற்றுப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாதை மாவட்டம் திட்டச்சேரி குத்தாலம் சாலையில் பிராவடையான் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு திட்டச்சேரி-குத்தாலம் சாலையில் பிராவடையான் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த பாலம் திட்டச்சேரி-குத்தாலம் இடையே பிராவடையான் ஆற்றின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது.
இந்த பாலம் வழியாக குத்தாலம்,நரிமணம்,கோபுராஜபுரம்,உத்தூர்,துறையூர்,சுள்ளாங்கால், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையாகவும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்று வரவும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த விளைபொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர்.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி எண்ணெய் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் அதிகளவில் சென்று வரும் இந்த சாலையில் உள்ள இப்பாலம் சேதமடைந்து அடிப்பகுதியில் சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து இரும்பு கம்பியில் வெளியே தெரிகிறது. இதனால் பாலம் இந்நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.
நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிலும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.