புதுவை : சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

புதுவை : சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்த மின்கம்பிகளை மாற்ற கோரிக்கை

புதுகை நகரில் சேதம் அடைந்த மின்கம்பங்கள் விபத்து நேரிடும் முன் மாற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகளில் காண்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்பு கூடாய் காட்சி தரும் மின்கம்பங்களை விபத்து நேரிடும் முன் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை நகரில் ஆங்காங்கே சில மின்கம்பங்கள் கடுமையாக சேதம் அடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அருகே மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன அதாவது மின்வாரிய கட்டுமான கட்டிடங்கள், மின் அளவி சோதனை கூடம் மற்றும் மின் திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகங்கள் அமைந்துள்ள இடத்தின் வாசலிலேயே ஒரு மின்கம்பம் மிகவும் மோசமாக சேதம் அடைந்த காணப்படுகிறது.

மின்வாரிய அலுவலகர்களின் கண்ணில் அடிக்கடி படும் இடத்திலேயே இப்படி சேதம் அடைந்த மின்கம்பம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல சாந்த நாதபுரம் ஒன்றாம் வீதியில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. அதாவது கான்கிரீட் உடைந்து உள்ளன உள்ளே உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு இந்த கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

பெரும் விபத்து ஏற்படுவது ஒருபுறம் என்றாலும் மழைக்காலத்தில் உள்ளே உள்ள கம்பிகள் வழியாக ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டு அதனால் மின்சாரம் தாக்கி விபத்து நேரிடுமா என பொதுமக்கள் அஞ்சுகின்றன. இதேபோல மின்வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுத்து முழுமையாக எல்லாவற்றையும் மாற்றி தர மின்வாரிய தலைமை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story