பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது. 

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது.
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது. வாணாபுரம் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு: பொது விநியோக திட்டத்தின் கீழ், மின்னணு குடும்ப அட்டை குறைகேட்பு சிறப்பு முகாம் வாணாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று 20ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடும்ப அட்டையில் முகவரி மற்றும் பெயர் திருத்தம், புதிதாக உறுப்பினரை சேர்த்தல், பெயர் நீக்குதல், கைபேசி எண் இணைத்தல். புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, தாலுகா பகுதிக்குட்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டையில் திருத்தம் இருந்தால், உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story